சிறுத்தை தாக்கி யானைக்குட்டி பலியான சோகம்..!

கோவை மேற்கு மலை தொடர்ச்சி பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக யானைகள் மற்றும் சிறுத்தைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்நிலையில் கோவை மதுக்கரையை அடுத்த அட்டமலை பகுதியில் கடந்த சில நாட்களாக யானைக் கூட்டங்கள் முகாமிட்டிருந்துள்ளது.

இந்த யானை கூட்டங்களுக்கு இடையே ஒரு குட்டி யானை இருந்துள்ளது. அப்போதுரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் அந்த யானை குட்டி சோர்வாக இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு குட்டி யானைக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

அப்போது அந்த குட்டி யானை பிறக்கும்பொழுதே முழு வளர்ச்சியின்றி பிறந்துள்ளதும் சிறுத்தை தாக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து குட்டி யானைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அந்த குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது. சிறுத்தை தாக்கி குட்டியானை உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News