பேருந்தை நிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் அருகே படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களை கண்டித்து சாலையில் பேருந்தை நிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தரமேரூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தில் படிக்கட்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொங்கியப்படியே சாலையில் கால்களால் தேய்த்தப்படி அராஜக செயல்களில் ஈடுபட்டனர்.

இதனை தட்டிக் கேட்ட பேருந்து நடத்துநரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதையடுத்து பேருந்தை நடுரோட்டில் நிறுத்திய ஓட்டுநர் மற்றும் நடத்துநர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.