துப்பாக்கியில் தோட்டாவை லோட் பண்ண தெரியாமல் சிக்கிக்கொண்ட உபி போலீஸ்..!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் துப்பாக்கியில் தோட்டாவை லோட் பண்ண தெரியாமல் எஸ்.ஐ ஒருவர் உயர் அதிகாரியிடம் சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் சந்த் கபிர் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு டிஐஜி ஆர்.கே.பரத்வாஜ் திடீரென ஆய்விற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவலர்களிடம் துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது என கேட்டுள்ளார்.

அப்போது, துப்பாக்கியை எடுத்து வந்த எஸ்.ஐ ஒருவரிடம் அதில் தோட்டாவை எங்கே போட வேண்டும் என்று டிஐஜி கேட்டுள்ளார். அதற்கு அந்த எஸ்.ஐ முன்புறமாக உள்ள துளையில் போட வேண்டும் என்று கூறுகிறார்.இப்படித்தான் சுட வேண்டுமா என டிஐஜி கேட்க, அவரும் அசராமல் ஆமாம் என்கிறார். அதைக் கேட்டு டிஐஜி சிரித்து விடுகிறார்.

அவசர காலங்களில் எப்படி துப்பாக்கியை பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இனியாவது திருத்தி கொள்ளுங்கள் என டிஐஜி அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்வை சுற்றியிருந்த பலரும் வீடியோ எடுத்த நிலையில் இணையத்தில் பதிவேற்றி வைரலாக்கி விட்டுள்ளனர்.