ரயிலில் இடம் இல்லாததால் டிரைவர் சீட்டில் அமர்ந்து பயணம் செய்த பெண் – வைரல் வீடியோ

இந்தியாவில் மிகப்பெரிய நகரமான மும்பையில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ரயிலில் பயணம் செய்த பெண் ஒருவர் இடம் இல்லாமல் படி அருகே தொங்கியபடி இருந்தார். இதனால் ரயிலின் ஆட்டோமேட்டிக் கதவுகள் மூடமுடியாமல் இருந்தது. இதனால் பயணிகள் அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை கவனித்த ரயில்வே காவலர்கள் அந்த பெண்ணை கிழே இறங்கி அடுத்த ரயிலில் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அந்த பெண் பிடிக்குடுக்காமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ரயில்வே காவலர் ஒருவர் அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு ரயிலை ஓட்டும் டிரைவர் பயணிக்கும் அறைக்கு அழைத்து சென்று அங்கு அமரவைத்தார். அந்த பெண்ணும் அமர்ந்துகொண்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவிவருகிறது.