கரோனா ஊரடங்கு காலத்தில் , சிறியவர் முதல் பெரியோர் வரை பப்ஜி பரவலான இணைய விளையாட்டாகவும்,எளிதில் நட்பாகவும் காதலாகவும் மனதளவில் பேசி இணையும் ஒரு கேம் என்று வளம் வந்து கொண்டிருந்தது.
அக்காலகட்டத்தில், பப்ஜி வழியாக பாகிஸ்தானின் சீமா குலாம் ஹைதர் ( 30 ) , இந்தியாவின் நொய்டாவை சேர்ந்த சம்சத்தின் மீனா (22) ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது .அது காதலாக மாறிய நிலையில்,சவுதி அரேபியாவில் பணிபுரியும் தனது கணவருக்கு தெரியாமல் ,குலாம் ஹைதருக்கு பிறந்த நான்கு குழந்தைகளுடன்.தனது பப்ஜி காதலனை காண புறப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள நிலத்தை விற்று, அப்பணத்தை பயன்படுத்தி, சட்டவிரோதமாக நேபாளம் வழியாக இந்தியா வந்துள்ளார்.தனது காதலன்,நான்கு குழந்தைகளுடன் சீமா வசித்து வந்துள்ளார் . இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் காவல் துறையில் புகாரளித்தனர்.இச்செய்தி அறிந்து தலைமறைவான இருவரும் கடந்த 4 ஆம் தேதி தேதி கைது செய்யப்பட்டனர்.பின்னர் இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.
இதையடுத்து , குழந்தைகளை மட்டும் பாகிஸ்தான் அனுப்பி வைத்துவிட்டு சீமா இந்தியாவிலேயே இருந்து கொள்ளட்டும் என்றும் அவர் இஸ்லாமிய பெண் இல்லை என்றும் ,அவர் பாகிஸ்தானுக்கு திரும்பி வர துளியளவு விருப்பமில்லை என்று சீமா குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சீமா பாகிஸ்தான் வந்தால் ,நிச்சயம் தண்டிக்கப்படுவார் என்று அவர் சார்ந்த சமூகத்தினர் மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.