புகை பிடிப்பதை உற்றுப்பார்த்த வாலிபரை கொலை செய்த பெண்

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள சாலையோர கடையில் ஜெய்ஸ்ரீ (24) என்ற இளம்பெண் ஒருவர், தனது தோழியுடன் சேர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார். அந்த கடைக்கு ரஞ்சித் (28) என்ற இளைஞர் வந்துள்ளார். கடையின் முன்பு இளம்பெண் புகை பிடித்துக்கொண்டிருப்பதை ரஞ்சித், முறைத்தபடி உற்று பார்த்துள்ளார்.

இதனால் கடுப்பான ஜெய்ஸ்ரீ, ரஞ்சித்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் சிகெரெட் புகைத்துக்கொண்டே, புகையை ரஞ்சித்தை நோக்கி விட்டுள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து ஜெய்ஸ்ரீ தனது நண்பர்களை வரவழைத்து ரஞ்சித்தை வழிமறித்து தாக்கியுள்ளனர். அப்போது ஜெய்ஸ்ரீ, கத்தியை கொண்டு ரஞ்சித்தை பலமுறை குத்தினார். இதில் ரஞ்சித், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெய்ஸ்ரீ மற்றும் அவரது நண்பர்களான சவிதா மற்றும் ஆகாஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News