கிளப் ஹவுஸ் என்கிற டேட்டிங் செயலி மூலமாக புதுச்சேரியை சேர்ந்த 19 வயது இளம்பெண் சென்னையை சேர்ந்த திலிப் குமார் என்கிற வாலிபருடன் நெருங்கி பழகியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இளம் பெண்ணிக்கும், திலீப் குமார்க்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டதை அடுத்து அப்பெண் நாம் காதலிக்க வேண்டாம், நண்பர்களாக பேசி கொள்ளலாம் என கூறியுள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த திலீப் குமார் நீ என்னிடம் பேசவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன், கையை அறுத்துக் கொள்வேன் என மிரட்டியுள்ளார். நீ நிர்வாணமாக வீடியோ காலில் வந்து பேச வேண்டும். அப்போதுதான் நான் உன்னை தொந்தரவு செய்யமாட்டேன் என கூறியுள்ளார்.
இதை நம்பிய அந்த இளம்பெண் வீடியோ காலில் நிர்வாணமாக பேசியுள்ளார். இதனை திலீப் குமார் தனது மொபைலில் பதிவு செய்துள்ளான். அந்த நிர்வாண வீடியோவை காட்டி திருமணம் செய்துகொள்ளுமாறு மிரட்டியுள்ளார். இதையடுத்து புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீலிப் குமாரை தேடி வருகின்றனர்.