மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக பலி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தார்.

மணப்பாறை அருகே உள்ள பெரிய வெள்ளபட்டியை சேர்ந்த சின்னத்துரை என்பவர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின், தண்ணீர் நிரப்பும் வேலை பார்த்து வந்தார்.

இவர், அவ்வப்போது மின்சாரம் தொடர்பான பணிகளையும் செய்து வந்திருக்கிறார்.
இந்நிலையில், நேற்று அந்த கிராமத்தில் உள்ள மின் கம்பத்தில் ஏறி, பழுதை சரி செய்யும்பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக வையம்பட்டி போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர்.