இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை அபுதாபியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை திறந்து வைத்தார்.
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயில் என பெயர் பெற்ற இந்த கோயிலுக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி வைத்தார்.
கோயிலைத் திறந்து வைத்தபிறகு பிரதமர் மோடி பூஜையில் பங்கேற்று வழிபாடு செய்தார். அதன்பிறகு கோயிலைச் சுற்றிப்பார்த்த அவர் கோயில் கல்லில் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற சம்ஸ்கிருத வார்த்தைகளை பொறித்தார்.
வசுதைவ குடும்பகம் என்ற சம்ஸ்கிருத வார்த்தைக்கு ‘உலகமே ஒரே குடும்பம்’ என பொருள் ஆகும். உலகத்தில் உள்ள அனைவரும் ஒரே குடும்பம் என்பதை பறைசாற்றும் வகையில் பிரதமர் மோடி இந்த வார்த்தையை பொறித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.