Connect with us

Raj News Tamil

நீச்சல் போட்டியில் உலக சாதனைப் படைத்த இளம் வீரர்!

விளையாட்டு

நீச்சல் போட்டியில் உலக சாதனைப் படைத்த இளம் வீரர்!

உலக நீச்சல் போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 22 வயது கொண்ட லியோன் மர்சந்த் உலக சாதனைப் படைத்துள்ளார்.

ஜப்பான் நாட்டின் ஃபுகுவோகாவில் உலக அக்வாடிக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் ஆண்களுக்கான தனி நபர் 400 மீட்டர் மெட்லே வகை நீச்சல் போட்டியில் இறுதிச்சுற்றில் 400 மீட்டர் தூரத்தை 4 நிமிடங்கள் 2.50 வினாடிகள் கடந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று உலக சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த நீச்சலில் ஜாம்பவானான பெல்ஸின் சாதனையை முறியடித்துள்ளார்.

More in விளையாட்டு

To Top