பெண் மருத்துவரை தாக்கிய இளைஞர்!

குரோம்பேட்டை கணபதிபுரத்தை சேர்ந்த ஐடி ஊழியரான அமுதன் அவரது மனைவி புவனா இவர் பல் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் ரேடிய சாலை ஹோட்டலுக்கு சாப்பிட சென்றபோது ஹோட்டலுக்கு நுழையும் பொழுது முதியவர் விசுவதாஸ் மீது உரசியபடி சென்றதாக கூறப்படுகிறது.

இதில் முதியவர் விஸ்வதாஸுடன் வந்திருந்த அவரது மகன் மகேந்திரனுக்கும் அமுதனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து சமாதானமான அவர்கள் ஹோட்டலுக்குள் சென்று சாப்பிட சென்றுள்ளனர். அப்போது கோபம் குறையாத மகேந்திரன் ஹோட்டலுக்குள் மருத்துவ மனைவியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அமுதனை சரமாரியாக தாக்கியுள்ளார். அப்பொழுது தடுக்க முற்பட்ட பெண் என்னும் பாராமல் மருத்துவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இது குறித்து அருகில் இருந்த பொதுமக்கள் சிட்லபாக்கம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News