நேற்று அபுதாபியிலிருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது பெண் பயணி ஒருவர் கூச்சலிட்டார்.
பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஆண் பயணி ஒருவர் தனது இருக்கைகளுக்கு இடையே கையை விட்டு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக விமான பணிப்பெண்களிடம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரை கைது செய்தனர்.
அந்த இளைஞர் காரைக்குடியைச் சேர்ந்த சக்தி என்பது தெரியவந்தது. இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் சக்தியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.