இயக்குனர் விஜய்யிடம் குடிபோதையில் தகராறு செய்த இளைஞர்!

சென்னை தியாகராய நகர் ஹபிபுல்லா சாலையில் இன்று காலை இயக்குனர் விஜய் படப்பிடிப்பிற்காக தனது நான்கு சக்கர வாகனத்தில் சென்றபோது அதிகளவு மது போதையில் வந்த இளைஞர் இயக்குனர் விஜயின் நான்கு சக்கர வாகனத்தின் கண்ணாடியை இடித்தது மட்டுமில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து விஜய்யுடன் இருந்த உதவி இயக்குனர்கள், அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்தனர்.

இதனை அடுத்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டறைக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தேனாம்பேட்டை போலீசார் உதவி இயக்குனர்களுடன் புகாரை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் வருவதைக் கண்டு போதை ஆசாமி அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் குடிபோதை ஆசாமியை தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News