பொன்னியின் செல்வனை பின்னுக்கு தள்ளிய அண்ணாச்சி!

சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் எத்தனை திரையரங்குகளில் வெளியானது என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, கடந்த பிப்ரவரி மாதம் வெளியான வலிமை திரைப்படத்திற்கு, ஆயிரம் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதாம்.

அதற்கு அடுத்ததாக, ஏப்ரல் மாதம் வெளியான பீஸ்ட் திரைப்படத்திற்கு, 800 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதாம். பின்னர், ஜூலை மாதம் வெளியான லெஜண்ட் திரைப்படத்திற்கு 700 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதாம். செப்டம்பர் மாதம் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு, வெறும் 480 திரையரங்குகள் தான் ஒதுக்கப்பட்டதாம்.

கடைசியாக, சமீபத்தில் வெளியாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு, 600 திரையரங்குகள் தான் ஒதுக்கப்பட்டதாம். இந்த அளவீடுகளை பார்க்கும்போது, பொன்னியின் செல்வனை விட, தி லெஜண்ட் திரைப்படத்திற்கு, அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டிருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நானே வருவேன் திரைப்படம் வெளியாகாமல் இருந்திருந்தால், இன்னும் கூடுதலான திரையரங்குகள், பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.