“எங்களுக்கு பங்கு வேண்டும்” – தியேட்டர் உரிமையாளர்கள் வைத்த கோரிக்கை!

திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட நிர்வாகிகள், 9 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அந்த கோரிக்கைகள் பின்வருமாறு:-

1. புதிய திரைப்படங்கள் வெளிவந்து 8 வாரங்கள் கழித்து தான் ஓடிடியில் திரையிட வேண்டும்.

2. ஓடிடியில் புதிய திரைப்படங்கள் 4 வாரங்கள் கழிந்த பிறகு தான் விளம்பரம் செய்ய வேண்டும்.

3. புதிய திரைப்படங்களுக்கு அதிகபட்சமாக 60% தான் பங்கு தொகை கேட்க வேண்டும்.

4. திரையரங்குகளில் திரையிட தயாரிக்கப்பட்ட படங்களை ஓடிடியில் திரையிடும்போது அதில் வரும் வருமானத்தில் ஒரு பங்கு திரையரங்கிற்கு அளிக்க வேண்டும்.

அரசுக்கு விடுத்த கோரிக்கைகள்

1. திரையரங்குகளுக்கு பராமரிப்பு கட்டணம் மற்ற மாநிலத்தில் உள்ளது போல் வசூலிக்க அனுமதிக்க வேண்டும்.

2. திரையரங்குகள் வர்த்தகம் சம்பந்தமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

3. மின்சார கட்டணங்கள், சொத்துவரி ஆகியவை திரையரங்குகளுக்கு குறைத்து வசூலிக்க ஆவணம் செய்ய வேண்டும்.

4. ஏற்கனவே கொடுத்துள்ள கோரிக்கைகளை அரசு மறு பரிசீலனை செய்து விரைவில் அனுமதி அளித்து திரையரங்குகளை வாழ வழி செய்ய அரசை வேண்டுகிறோம்.

RELATED ARTICLES

Recent News