இயக்குநர் ராம நாராயணன் தொடங்கிய நிறுவனம் தான் தேனாண்டால் பிலிம்ஸ். மிகவும் குறைந்த பட்ஜெட்டில் படங்களை எடுத்து அதிகம் லாபம் பார்த்து வந்த இந்நிறுவனம், கடைசியாக, விஜயை வைத்து மெர்சல் என்ற பிரம்மாண்ட படத்தை எடுத்திருந்தது.
அந்த திரைப்படம், மிகப்பெரிய வசூல் சாதனை செய்திருந்தது என்று சிலர் கூறினாலும், அந்த படத்திற்கு பிறகு, வேறு எந்த படத்தையும் தேனாண்டால் பிலிம்ஸ் தயாரிக்கவில்லை.
இந்நிலையில், தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எங்களது அடுத்த புராஜெக்ட்டை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம் என்றும், வரும் 12-ஆம் தேதி முதல், இன்னொரு வேலையில்லா பட்டதாரியை பார்ப்பதற்கு தயாராக இருங்கள் என்றும் கூறியுள்ளார்.