Connect with us

Raj News Tamil

பாஜகவைவிட பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகம்

பாஜகவைவிட பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பாஜகவைவிட பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயண நிறைவு விழாவில் அவர் பேசியது:

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எங்கு சென்றாலும் பெரும் திருவிழாவைப் போல அந்த இடம் காட்சியளிக்கிறது. அப்படியொரு வரவேற்பையும் அன்பையும் மக்கள் அவர் மீது பொழிகின்றனர்.

இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தின் இடையே அவர் பல இடர்களை பாஜக அரசின் மூலம் எதிர்கொண்டார். அவரது பயணத்துக்கு அனுமதி மறுக்க என்னென்னவோ காரணங்களைச் சொல்லிப் பார்த்தார்கள். தடைகளை மீறி ராகுல் காந்தி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

ராகுல் காந்திக்கு கூடிய மக்கள் வெள்ளம், பாஜகவை தூக்கமிழக்கச் செய்தது. அவரது மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்தார்கள். ஆனால், அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மீண்டும் மக்களவையில் நுழைந்து முழங்கினார்.

இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் எனும் பயணம் ராகுல்காந்தி என்ற தனிமனிதரின் பயணமல்ல. இது இந்தியாவுக்கான பயணம். இந்தியாவுக்கு இப்போது தேவை ஒற்றுமைதான். மக்களைப் பிளவுபடுத்தும் பாஜக விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும். கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமர் மோடி செய்தது இரண்டே இரண்டுதான். ஒன்று வெளிநாட்டுப் பய ணங்கள். மற்றொன்று பொய்ப் பிரசாரம்.

பாஜகவை நாம் இப்போதே நிறுத்தியாக வேண்டும். அதுதான் நம் இலக்கு. ‘இந்தியா’ கூட்டணியை நாம் உருவாக்கிய நாளில் இருந்து, இந்தியா என்ற சொல்லையே பாஜக தவிர்க்கத் தொடங்கி விட்டது. அந்த அளவுக்கு அச்சத்தில் இருக்கிறார்கள்.

அதனால்தான் பிரதமர் மோடி நமது கூட்டணி குறித்து அவதூறு செய்து வருகிறார். ‘இந்தியா’ கூட்டணி ஊழல் கூட்டணி என்கிறார். ஆனால், ஊழலில் ஊறிய கட்சி பாஜகதான். இதை தேர்தல் பத்திர ஊழல் அம்பலப்படுத்திவிட்டது. இது பாஜகவின் நவீன ஊழல். தனது தோல்விகளையும் ஊழல்களையும் திசைதிருப்பவே நம் மீது மோடி குற்றம்சாட்டுகிறார்.

நாம் மக்களுக்கு நன்மை செய்ய அரசியலுக்கு வந்தவர்கள். கேளிக்கைக்காக இல்லை. இந்தியாவின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள நாட்டின் ஒவ்வொரு மாநிலத்துக் கும் ராகுல் காந்தி பயணித்திருக்கிறார். பாஜகவால் சீரழிக்கப்பட்ட நம் இந்தியாவை மீட்பதற்கான பயணம் இது. பாஜகவைவிட பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை. அவர்களிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top