அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அதிமுக
தலைமையை கோபம் அடையச் செய்தது.
இதனையடுத்து அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தொடர்ந்து அண்ணாமலையின் பேச்சுக்களுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அறிவித்தார்.
இதனையடுத்து பொள்ளாச்சியில் நகர பாஜக சார்பில் நகர தலைவர் பரமகுரு தலைமையில் மத்திய பேருந்து நிலையம் முன்பு திரண்ட பாஜகவினர் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று அறிவிப்புக்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் விதமாக பட்டாசு வெடிக்க முயற்சித்தனர். அதற்கு போலீசார் அனுமதி தர மறுத்தனர்.
இதையடுத்து பாஜகவினர் ஜெயக்குமாரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாஜகவினர் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.