அதிமுக – பாஜக இடையே மோதல் வருவது எல்லாம் சகஜமானது தான் – அண்ணாமலை பேட்டி

பாஜக -அதிமுக இடையே பிரச்சனை இல்லை என்றும் அதிமுக தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே தான் பிரச்சனை இருப்பதாக நினைக்கிறேன் என்றும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும் பேச்சுக்கள் அவ்வப்போது அதிமுக பாஜக இடையே சலசலப்பை ஏற்படுத்தி விடும். சமீபத்தில் அண்ணாவை பற்றி அண்ணாமலை பேசியது அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அதிமுக பாஜக இடையேயான கூட்டணி முறிந்தது என்ற செய்தியும் வெளிவந்தது.

இதனையடுத்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எனது அரசியலில் நான் தெளிவாக இருக்கிறேன். எனக்கு யாருடனும் பிரச்சினை இல்லை. யாரையும் நான் தவறாக பேசவில்லை. கூட்டணி தொடர்பாக அதிமுக பேசிய கருத்துக்கு நான் பதிலளிக்க முடியாது என்று கூறினார்.

அதிமுக – பாஜக இடையே சித்தாந்தங்கள் வேறு வேறு எனும் போது சில முட்டல் , மோதல் இருக்கத்தான் செய்யும். பாஜக -அதிமுக இடையே பிரச்சனை இல்லை.அதிமுக தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே தான் பிரச்சனை இருப்பதாக நினைக்கிறேன்.

அதிமுகவில் சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்சனை இருக்கிறதா என்றால் இருக்கலாம். கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையே மோதல் வருவது எல்லாம் சகஜமானது தான் என அவர் பேசியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News