Connect with us

Raj News Tamil

ஒரே ஒரு பாபா ரஜினி தான் – விநாயகன் நெகிழ்ச்சி!

சினிமா

ஒரே ஒரு பாபா ரஜினி தான் – விநாயகன் நெகிழ்ச்சி!

ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோர்க்கு படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் சொகுசு காரை பரிசாக வழங்கி இருந்தது.

இந்நிலையில், ஜெயிலர் படத்தில் நடித்த நடிகர்களின் அனுபவத்தை வீடியோவாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வில்லனாக நடித்த விநாயகன், தனக்கு கிடைத்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.

அதில், ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘ஸ்வப்பனத்தில கூட யோசிக்கல சார்’ வசனத்தை போல நான் ரஜினி சார் கூட நடிப்பேன் என்று நினைக்கவில்லை என கூறினார்.

மேலும், இந்த கேரக்டர் இவ்வளவு பெருசா வர காரணம், ஒரே ஒரு மனுஷன், ஒரே ஒரு பாபா, ரஜினி தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top