தெலுங்கில் ரீமேக் ஆகும் விஜய் படம்.. வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. ஆரம்பமே சர்ச்சை தான்..

இயக்குநர் அட்லி இயக்கத்தில், விஜய் நடிப்பில் முதன்முறையாக உருவான திரைப்படம் தெறி. பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், தற்போது தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. உஸ்தாத் பகத்சிங் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், பவன் கல்யாண் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி, பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. அதாவது, சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயர், பவன் கல்யாண் காலுக்கு கீழே இடம்பெற்றுள்ளது. இதுதான் தற்போதைய சர்ச்சைக்கு காரணமாக இருந்து வருகிறது.

இதுகுறித்து பிரபல நடிகை பூனம் கௌர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சுதந்திர போராட்ட வீரர்களை நீங்கள் மதிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், காலில் போட்டு மிதிக்காதீர்கள்..

இது தெரியாமல் நடந்த தவறா? அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டதா? என்று புரியவில்லை” என தெரிவித்துள்ளார். இந்த நடிகை மட்டுமின்றி, வேறு சில நெட்டிசன்களும், இந்த போஸ்டரை விமர்சித்து வருகின்றனர். இதற்கு, பவன் கல்யாணின் ரசிகர்களும், தங்களது பதிலடிகளை கொடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News