“பழைய பொருள் கொடுத்து ஏமாத்திட்டாங்க” – பாதியிலேயே நின்ற திருமணம்! புகார் கொடுத்த பெண் வீட்டார்!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த நபர், பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று திருமணம் நடக்க இருந்தது. ஆனால், திருமண நாள் அன்று, திருமண மண்டபத்தில் பெரிய பிரச்சனையே நடந்து, திருமணம் பாதியிலேயே நின்றுவிட்டது.

அதாவது, திருமணத்திற்காக பெண் வீட்டார் தரப்பில் சீர்வரிசை வழங்குவது வழக்கம். அந்த வகையில், தற்போது வழங்கப்பட்ட சீர்வரிசைகள், பழைய பொருட்களாக உள்ளது என்று, மனமகன் வீட்டார் தகராறு செய்துள்ளனர்.

திருமணம் முடிந்த பிறகு, புதிய பொருட்கள் வாங்கி தருகிறோம் என்று கூறியும், அவர்கள் ஒத்துக்கொள்ளவே இல்லை. இதன்காரணமாக அந்த திருமணமே நின்றுவிட்டது. இதையடுத்து, பெண் வீட்டார் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வரதட்சனை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News