உலகளவில் அதிகம் உபயோகிக்கப்படும் இணையதளங்களில் கூகுளுக்கு அடுத்தபடியாக யூட்யூப் பிடித்திருக்கிறது. இந்தியாவில் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் 600 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட அனைவரும் யூட்யூபை தினசரி பார்ப்பவர்களாக உள்ளனர்.
இந்நிலையில் அரசு ஊழியர்கள் யாரும் இனி யூட்யூப் சேனல்கள் நடத்த கூடாது. இனி புதிய சேனல்களையும் திறக்க கூடாது என கேரள அரசு அதிரடி உத்தரவு போட்டுள்ளது.
கேரளா தொழிலாளர் சட்டம் 1960ன் படி அரசு ஊழியர்கள் யூட்யூப் சேனல்கள் நடத்துவது விதிக்கு புறம்பானது என கேரள அரசு தெரிவித்துள்ளது.
அந்த சட்டத்தின்படி ஒரு அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது வருமானத்தை தரும் வேறு ஒரு தொழிலை செய்வது சட்ட விரோதமாகும் கூறப்பட்டுள்ளது.