தமிழ் சினிமாவின் முன்னணி வில்லனாக வலம் வந்தவர் பொன்னம்பலம். ரஜினி,கமல்,விஜயகாந்த் உள்ளிட்ட ஹீரோக்களுடன் நடித்த இவர், பெரிதளவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார். பின்னர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டர். இதனிடையே சிறுநீரக செயலிழப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொன்னம்பலத்தின், வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது.
இதையடுத்து வெளிப்படையாக பலரிடம் உதவி கேட்ட இவருக்கு, சரத்குமார், கமலஹாசன் என பலர் உதவி செய்தனர். மேலும் இவரது, சொந்த அக்கா மகனே அவரது கிட்னியை கொடுத்து உதவினார். தற்போது இது குறித்து பேசிய பொன்னம்பலம், சிறுநீரக பிரச்சனைக்கு குடிப்பழக்கம் தான் காரணம் என்று வதந்திகள் பரவியது என்றும்,இதனால் தான் பாதிப்படைந்து என்றும் பலர் நினைத்தனர் என்று கூறினார். ஆனால் இது எதுவும் உண்மையில்லை என்ற இவர், என் தந்தையின் மூன்றாவது மனைவியின் மகன் சில காலம் எனது மேலாளராக பணியாற்றிய போது, எனக்கு ஸ்லோ பாய்சனை உணவில் கலந்து கொடுத்து வந்தார் என பகீர் தகவலை தெரிவித்தார்.