காதலிக்காக கழிவறையில் காத்திருந்து போனை திருடிய இளைஞன்!

அப்துல் முனார்ப் (27 வயது) என்ற இளைஞர் தன் காதலிக்கு விலைஉயர்ந்த பரிசு கொடுப்பதற்காக வித்தியாசமான முறையில் செல்போன் திருடி சிறைக்கு சென்றுள்ளார்.

ஜேடிபி நகர்ப்பகுதியில் இயங்கி வரும் மிகப்பெரிய செல்போன் ஷோரூம் ஒன்றிற்குள் இரவு நுழைந்தார்.அப்போது அந்த ஷோரூம் மூடும் நேரம் என்பதால், கதவுகளை அடைத்து பூட்ட ஊழியர்கள் தயாராகி கொண்டிருந்தனர்.

உடனே இந்த இளைஞர் கடையின் பாத்ரூமுக்குள் சென்று யாருக்கும் தெரியாமல் நுழைந்து கொண்டார்.கடையை ஊழியர்கள் மூடிவிட்டு சென்றபிறகு, பாத்ரூமில் இருந்து வெளியே வந்து 7 செல்போன்களை எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டார். பிறகு மறுபடியும் அதே கடையின் பாத்ரூமுக்குள் ஒளிந்து கொண்டார்..

மறுநாள் காலை வரை இந்த பாத்ரூமுக்குள்ளேயே பதுங்கி இருந்துள்ளார்.காலையில் வழக்கம்போல், ஊழியர்கள் கடையை திறந்து வந்துள்ளனர். இவரும் எதுவும் தெரியாததுபோல், பாத்ரூமில் இருந்து வெளியேறி சென்றுவிட்டார்.

இதையடுத்து, கடையின் ஊழியர்கள் போன்கள் திருடு போனதாக போலீசில் புகார் தந்துள்ளனர்.போலீசாரும், செல்போனில் உள்ள ஐஎம்இஐ நம்பரை வைத்து, திருடப்பட்ட செல்போன் இருக்கும் இடமும், அப்துல் முனாப் பற்றிய விவரங்களையும் கண்டறிந்தனர்.

அவரை கைது செய்து விசாரித்ததில்,சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பழக்கமான பெண் மீது காதல் கொண்டு, தன் காதலில் அந்த பெண் விழ வேண்டும் என இப்படி செய்துள்ளதாக கூறியுள்ளார்.

திருடியதில் 6 போன்களை அந்த பெண்ணுக்கு கொடுத்துவிட்டு 1 போனை தான் எடுத்துக்கொண்டுள்ளார்.அவைகளின் மதிப்பு 5 லட்சம் ரூபாயாகும்..