என்ன சார் இது…உள்ள பணமே இல்ல…ஏடிஎம் கேமராவை பார்த்து புலம்பிய திருடன்

சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம்மில் நேற்று இரவு 12 மணி அளவில் வந்த நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொண்டிருந்தார். இது அங்கிருந்த கேமராவில் பதிவானது. இயந்திரத்தை உடைத்த பின்னர் அதில் பணம் ஏதும் இல்லாததால் ஏமாந்து போன அவர் கேமராவை பார்த்து புலம்பியுள்ளார்.

உடனடியாக ஏடிஎம் மையத்தின் கேமராவை கண்காணித்த பாதுகாப்பு அதிகாரி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இது தொடர்பாக அவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News