கார்த்திகை தீபத் திருவிழா என்பது, தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது.
குறிப்பாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதுவும் குறிப்பாக, மகா தீபம் ஏற்றப்படுவதை பார்ப்பதற்கு, பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்வதும் வழக்கமாக நடந்து வருகிறது.
அந்த வகையில், இன்று திருகார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி, அண்ணாமலையார் கோவிலில், ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது, மலை உச்சியில், மகா தீபம் ஏற்பட்டது. இந்த காட்சியை கண்ட பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பி, பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.