எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்த திருமா..! திசைமாறும் தமிழக அரசியல்..!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை கைப்பற்றும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக- வின் பெரும்பான்மையான நிர்வாகிகளை வைத்துள்ள இவர், சமீபத்தில் இடைக்கால பொதுச்செயலாளராகவும் பதவியேற்றுக்கொண்டார்.

அண்மையில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்த நிலையில், பல்வேறு கட்சி அமைப்புகள் ஆதரவு அளித்துவந்தன. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இபிஎஸ், ஏன் சென்னை வந்த அமித்ஷாவை சந்திக்கவில்லை என செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு அமித்ஷா தமிழகம் வரும்போதெல்லாம் சந்திக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என்று ஆக்ரோஷமாக பேசினார். இதையடுத்து பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகுவதாக அரசியல் வட்டாத்தில் செய்திகள் வெளியாகின.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், பாஜகாவோடு கூட்டணி இல்லை என்ற பாணியில் இபிஎஸ் பேசியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. அவரது முயற்சி வரவேற்கத் தக்கது எனத் தெரிவித்தார்.