காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று, எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல், உளவுத்துறை தோல்வி அடைந்திருப்பதை தான் காட்டுகிறது என்று தெரிவித்தார்.
மேலும், ஆர்டிக்கிள் 370-ஐ நீக்கிவிட்டால், பயங்கரவாதம் இருக்காது என்று பாஜக உறுதி அளித்ததாகவும், ஆனால் அவர்களை நம்பி காஷ்மீருக்கு சென்ற மக்கள், படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
எனவே, இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பதவி விலக வேண்டும் என்றும், வலியுறுத்தியுள்ளார்.