எந்த கொம்பனாலும் விலைக்கு வாங்க முடியாது – திருமா அதிரடி

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2-வது ஆண்டு தொடக்க விழா, நேற்று நடைபெற்றது. இந்த விழாவில், தலைவர் விஜய் பேசும்போது, “அரசியலில் நிரந்தர எதிரியும், நண்பனும் என்று யாரும் இல்லை” எனக் கூறியிருந்தார். இவரது இந்த பேச்சு, வி.சி.க-வுக்கான குறி என்று கூறப்பட்டது.

மேலும், விஜயின் அரசியல் பயணம் வேகமெடுக்க ஆரம்பித்ததில் இருந்தே, த.வெ.க-வுடன், வி.சி.க கூட்டணி அமைத்துவிடும் என்ற பேச்சு எழுந்து வருகிறது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் நினைவேந்தல் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், விசிக-வின் தலைவர் திருமாவளவன் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 2026-ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில், வி.சி.க இல்லாமல், அரசியல் நகர்வு எதுவும் இருக்காது என்று தெரிவித்தார். மேலும், 35 ஆண்டுகள் கடுமையாக உழைத்த பிறகே, வி.சி.க-வுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றும், கொள்கையில் தெளிவு இருப்பதால், எந்த கொம்பனாலும், தன்னை விலைக்கு வாங்க முடியாது என்றும், அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News