தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் காலையில் இருந்தே வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூர் மாவட்டம் அங்கனூரில் தனது வாக்கினை பதிவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் “நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மக்களின் பக்கம் இந்தியா கூட்டணி நிற்கிறது.
நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி 40 இடங்களில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது” என அவர் கூறியுள்ளார்.