பொன்னியின் செல்வனில் மறைக்கப்பட்ட மிகப்பெரிய உண்மை! கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவல், வரலாற்று பிரசித்திப் பெற்றது. இலக்கிய வட்டாரங்களில் பெரும் பிரபலம் அடைந்த இந்த நாவல், திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதால், சாமானிய மக்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்து வருகிறது. இந்த நாவல் பற்றிய பேச்சாக தான் இணையம் முழுக்க இருந்து வருகிறது.

இந்நிலையில், மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி, பொன்னியின் செல்வனில் மறைக்கப்பட்ட மிக மோசமான உண்மை குறித்து பேசியுள்ளார். ராஜராஜ சோழனின் அண்ணன் தான் ஆதித்ய கரிகாலன். ஆற்றல் மிகுந்தவன். அந்த ஆதித்ய கரிகாலனை, 4 பார்ப்பனர்கள் இணைந்து, வஞ்சகம் செய்து கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வரலாற்று அறிஞர்களே இவ்வாறு கூறியுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த விஷயம், பொன்னியின் செல்வன் நாவலில் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாக, மே 17 இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் சிலர், தங்களது கண்டனங்களை கூறி வருகின்றனர். திருமுருகன் காந்தியின் இந்த தகவல், இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.