திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காசி விசுவநாதர் கோவில் மற்றும் மலைமேல் குமரர் என்று அழைக்கப்படும் முருகப்பெருமானின் தனி சன்னதி அமைந்துள்ளது.
இந்த காசி விசுவநாதர் கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் புகுந்து முருகனின் கையில் இருந்த மூன்றடி வேல் குத்து விளக்கு உள்ளிட்ட பொருள்கள் மற்றும் இரும்பு பீரோவை உடைத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் அடையாளம் காணக் கூடாது என்பதற்காக கோவிலில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் விபூதியை பூசி விட்டு CCTV கேமராவின் ஹார்ட் டிஸ்க்கை எடுத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் இன்று காலை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.