முருகனை சந்திக்க சென்ற நபர்.. எமனை சந்தித்த சோகம்.. என்ன ஆனது?

திருப்பத்தூர் மாவட்டம் கே.எம்.சாமிநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவர் தனது குடும்பத்தினருடன், திருத்தணி முருகன் கோவிலுக்கு பேருந்தில் நேற்று சென்றுள்ளார்.

திடீரென பாதி வழியிலேயே பேருந்தை நிறுத்திய ஜெகன், தனது குடும்ப உறுப்பினர்களை அங்கேயே விட்டுவிட்டு, ஆம்பூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அந்த சமயத்தில், ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஜெகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தற்கொலைக்கான காரணம் பற்றி, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News