வாரிசு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி, கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இருப்பினும், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என்ற Format-ல் இந்த திரைப்படம் Promote செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்திருப்பதாக, சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. படம் வெளியான ஏழே நாளில், இவ்வளவு கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது, ஆச்சரியத்தை தந்தது.
மேலும், விஜய் ரசிகர்களும், தங்களது காலரை தூங்கிக் கொண்டு, நாங்க தான் கெத்து என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இவ்வாறு இருக்க, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர், திருப்பூர் சுப்ரமணியனிடம், பேட்டி எடுக்கப்பட்டுள்ளது.
அதில், வாரிசு படத்தின் 200 கோடி ரூபாய் வசூல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “உலகம் முழுவதும் படத்தின் வசூல் என்ன என்பது இன்னும் சில நாட்கள் சென்ற பிறகு தான் தெரியவரும். ஆனால், தமிழகத்தில் மட்டும் படத்தை ரிலீஸ் செய்த லலித்துக்கு எப்படி, படத்தின் ஒட்டுமொத்த வசூல் என்னவென்று தெரியும்..
இதுமட்டுமின்றி, வாரிசு படத்துடன் வெளியான துணிவு திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.. இப்படி இருக்கும்போது, வாரிசு திரைப்படம் 210 கோடி ரூபாய் வசூல் செய்திருக்க, 200 சதவீதம் வாய்ப்பே இல்லை” என்று தெரிவித்துள்ளார்.