விஜயின் லியோ திரைப்படத்தை, தயாரிப்பாளர் லலித் குமார் என்பவர் தனது செவன் ஸ்கிரீன் ஸ்டியோ மூலம், தயாரித்திருந்தார். இந்த திரைப்படம், கடந்த 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியானது.
ஆரம்பம் முதலே கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், வசூலில் சாதனை புரிந்ததாக, படக்குழுவால் அறிவிக்கப்பட்டது. இதனை ரசிகர்கள் கொண்டாடினாலும், பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.
அதாவது, “லியோ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடர்பான முறைகேடு குறித்து பேட்டி அளித்ததால், என்னை லலித் குமார் அழைத்து, ஏன் இப்படி பேசுகிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்.
லியோ படத்தின் உண்மையான வசூல் நிலவரம் இதுவரை கணக்கிடப்படவில்லை. லியோ படக்குழுவினர் அப்படத்தின் டிக்கெட் புக்கிங்கில் முறைகேடு செய்துள்ளனர்.
எடுத்துக்காட்டுக்கு சொல்ல வேண்டுமானால், வெளிநாடுகளில் 5 கோடி ரூபாய் செலவு செய்து, டிக்கெட்டை தாங்களாக புக் செய்து, ரசிகர்கள் படம் பார்த்தது போல் செய்துள்ளனர்.
விஜயின் நல்ல அபிப்பிராயத்தை பெறுவதற்காகவே லலித்குமார் இப்படி செய்துள்ளார்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.