வாரிசு தயாரிப்பாளருக்கு தரமான பதிலடி!

வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், விஜய் தான் நம்பர் ஒண் ஹீரோ என்றும், அவருக்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன், தில் ராஜுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

விஜய் தான் நம்பர் ஒண் என்று அவர் கூறுவது சரியல்ல. தமிழ் சினிமாவை பொறுத்தவரை கதை தான் நம்பர் ஒண் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கதை நன்றாக இருந்தால் படம் வெற்றி பெறும். அஜித்தோ, விஜய்யோ, ரஜினியோ நம்பர் ஒண் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.