திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் இன்று விமர்சையாக நடைபெற்றது.
கார்த்திகை தீபத் திருவிழா வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படவுள்ளன
இந்த மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிக்க 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் கோயில் இணையதளத்தில் நாளை வெளியிடப்பட உள்ளது.
பரணி தீபத்தை காண ரூ.500 கட்டணத்தில் 500 டிக்கெட்கள் வழங்கபட உள்ளன. மேலும் மகா தீப தரிசனத்திற்கு ரூ.600 கட்டணத்தில் 100 டிக்கெட்களும், ரூ.500 கட்டணத்தில் 1,000 டிக்கெட்களும் வழங்கப்பட உள்ளன.
நாளை காலை 10 மணி முதல் https://annamalaiyar.hrce.tn.gov.in என்ற இணைய தளம் மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம்.