திருவண்ணாமலை மாவட்டத்தை 2 ஆக பிரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமதாஸ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசுகையில், “நிர்வாக வசதிக்காவும், திட்டங்கள் அம்மக்களை போய் சேரவும் திருவண்ணாமலை மாவட்டத்தை 2 ஆக பிரிக்க வேண்டும் என்றார். மேலும் கடலூர், கோவை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களையும் இரண்டாக பிரிக்க வேண்டும் என அவர் பேசியுள்ளார்.
சில கட்சிகளை சேர்ந்த குறுநில மன்னர்கள் இதையெல்லாம் செய்ய விட மாட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கு மக்களை பற்றி எந்தக் கவலையும் இல்லை. மாறாக தங்களின் நலன்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்” என்றார்.