Connect with us

Raj News Tamil

கேப்டன் மில்லரில் தனுஷ் இப்படி தான் நடிச்சார்! – எடிட்டர் கொடுத்த அப்டேட்!

சினிமா

கேப்டன் மில்லரில் தனுஷ் இப்படி தான் நடிச்சார்! – எடிட்டர் கொடுத்த அப்டேட்!

தமிழ் சினிமாவின் நடிப்பு அசுரன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம், பொங்கல் பண்டிகை அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இந்நிலையில் இப்படத்தின் எடிட்டர் நாகூரான் ராமசந்திரன் தனுஷ் பற்றி ஸ்வாரசிய தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது, தனுஷுக்கு அழுகிற காட்சிகள் இருந்ததாகவும் அப்போது கதாபாத்திரமாகவே மாறி கிளிசரின் இல்லாமல் தனுஷ் நிஜமாகவே அழுதார் என்றும் கூறியுள்ளார்.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்களில் வெளிவந்த படங்களிலேயே தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் தான் வசூலில் முன்னணி வகிக்கிறது என்பது குறிப்பிடதக்கது.

More in சினிமா

To Top