இந்திய அணி உலக கோப்பை வென்று 12 ஆண்டுகள் ஆகிவிட்டது, எனவே உலக கோப்பை வெல்ல இது சரியாத தருணம் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
13-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் சுற்றுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.
இதில் இந்திய அணி அனைத்து லீக் போட்களில் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. இந்தியா அணி அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை நவ.15 தேதி எதிர் கொள்கிறது.
இந்நிலையில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்தாவது:
இந்திய அணியில் தற்போது உள்ள முன்னணி வீரர்கள் அனைவரும் உச்சக்கட்ட பார்மில் உள்ளனர், இது இந்திய அணி ஐசிசி பட்டத்தை வெல்வதற்கு கிடைத்த சிறப்பான வாய்ப்பு.
இந்திய அணி உலக கோப்பை வென்று 12 ஆண்டுகள் ஆகிவிட்டது, எனவே உலக கோப்பை வெல்ல இது சரியாத தருணம், இதனை நாம் தவறவிட்டு விட்டால் அடுத்த 3 உலக கோப்பை தொடர்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடும்.
அணியின் சிறந்த பார்மில் உள்ள வீரர்கள் சிலருக்கு இது கடைசி உலக கோப்பையாக கூட இருக்கலாம், அவர்கள் இந்திய அணியை பல போட்டிகளில் வெற்றி பெற வைத்துள்ளனர், எனவே இன்னும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டால் மட்டும் போதும் கோப்பையை நமது கைகளில் ஏந்தி விடலாம்.
பேட்ஸ்மேன்களை போல பும்ரா, ஷமி, சிராஜ், குல்தீப், ஜடேஜா ஆகிய பந்துவீச்சாளர்களும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.