மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையின் 10 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சித்தொண்டர்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது, இதனை மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் துவக்கி வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இந்த புயலில் எதிர்பார்த்ததைவிட அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு வந்தததெல்லாம் சிற்றிடர். இது பேரிடர். குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட இறங்கி வேலை செய்யவேண்டியது நம் கடமை. மக்களுக்கு உதவுவதுதான் இப்போது முக்கியம். காலநிலை மாற்றம் என்பது உலகம் முழுவதும் நிகழும் ஒன்று.
மக்களுக்கு என்ன செய்வது என்பதுதான் தற்போதைய பணியே தவிர அரசை குறை கூறுவது அல்ல.
அரசு இயந்திரம் ஒரு கோடி பேருக்கு சென்று சேர்வது சாத்தியமில்லை, எதிர்காலத்தில் மழை பாதிப்பு இல்லாதபடி வல்லுனர்களுடன் இணைந்து திட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
எனவே குறை சொல்வதை பிற்பாடு வைத்துக்கொண்டு மக்களுக்குத் தேவையானதை உடனே செய்ய வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் நாளை மருத்துவ முகாம் தொடங்கப்படும்’ என்று பேசினார்.