Connect with us

Raj News Tamil

இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்கும் பட்ஜெட் இது! – பிரதமர் மோடி

இந்தியா

இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்கும் பட்ஜெட் இது! – பிரதமர் மோடி

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு அவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று உரையாற்றினார்.

இந்த நிலையில், 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதி அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்து உறையாற்றினார். அப்போது மத்திய அரசின் பல்வேறு சாதனைகள் மற்றும் செயல்பாடுகளை அவர் பட்டியலிட்டார்.

பட்ஜெட் தாக்கல் குறித்து பிரதமர் மோடி கூறியது, நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் இந்திய வளர்ச்சிக்கான பட்ஜெட். வளர்ந்த இந்தியாவின் நான்கு தூண்களாக இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் உள்ளனர்.

இந்தியாவின் எதிர்காலத்தை உருவாக்கும் பட்ஜெட் இது. ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி அறிவிக்கப்பட்டதை மேற்கொள் காட்டிய அவர் ஸ்டார்ட் அப்களுக்கு தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த பட்ஜெட் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு, இளைஞர்களுக்கு எண்ணற்ற வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

More in இந்தியா

To Top