இந்தியாவில் வாழ்வதற்கேற்ற மலிவான நகரம் இதுதான்!

முன்னணி ப்ராபர்ட்டி ஆலோசகரான நைட் ஃபிராங்க் இந்தியாவில் வாழ்வதற்கேற்ற மலிவான நகரம், அதிக காஸ்ட்லியான நகரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி வீட்டுக் கடன் EMI மற்றும் வருமான விகிதம் 55% பெற்று மிகவும் விலையுயர்ந்த நகரம் மும்பை எனத் தெரியவந்துள்ளது. அடுத்ததாக, 31% EMI வருமான விகிதத்துடன் ஹைதராபாத் 2-வது மிகவும் விலையுயர்ந்த நகரமாக உள்ளது.

30% பெற்று டெல்லி 3வது இடத்திலும், 28% பெற்று சென்னை நான்காவது இடத்தில் உள்ளது.

அடுத்ததாக, 5வது இடத்தில், மகாராஷ்டிராவில் உள்ள புனே உள்ளது. இங்கு ஒரு சராசரி குடும்பம் தங்கள் வருமானத்தில் 26% வீட்டுக் கடன் EMI-களில் செலுத்த வேண்டும்.

இதில், குஜராத்தில் உள்ள அகமதாபாத் தான் வாழ மிகவும் மலிவான இந்திய நகரம் எனத் தெரியவந்துள்ளது. அங்கு ஒரு சராசரி குடும்பம் தனது வருமானத்தில் 23% வீட்டுக் கடன் EMI-களுக்கு செலுத்த வேண்டும்.

RELATED ARTICLES

Recent News