லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை வழங்கியுள்ளது.
இந்நிலையில் இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது, லியோ திரைப்படத்தில் அதிகமாக கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தபட்டுள்ளதாகவும், அந்த காட்சிகளெல்லாம் ம்யூட் செய்யப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் சில கெட்ட வார்த்தைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுவரை வேறெந்த விஜய் படங்களிலும் இல்லாத அளவிற்கு இந்த படத்தில் தான் அதிக கெட்ட வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.