ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தியாகராஜா குமாரராஜா. இந்த படத்திற்கு பிறகு, நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட இவர், விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா உள்ளிட்டோரை வைத்து, சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இதையடுத்து, மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தலாஜி திரைப்படத்தில், நினைவோ ஒரு பறவை என்ற பகுதியை இயக்கியிருந்தார்.
பல ஆண்டுகள் ஆகியும், வெறும் 3 படைப்புகளை மட்டுமே இயக்கியுள்ள இவர், தற்போது நடிகர் மணிகண்டனை வைத்து, புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல், இருதரப்பு ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.