கூட்டணி தர்மத்திற்காக, தனக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த விஜயின் கதவை மூடியதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் உள்ள திருபுவனையில், அம்பேத்கரின் திருவுருவ சிலை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தொண்டர்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, துணை முதல்வர் பதவி என ஆசை வார்த்தைகள் கூறி, தன்னை வீழ்த்தி விட முடியாது என்று தெரிவித்தார்.
மேலும், கூட்டணி தர்மத்திற்காக, அதிமுகவின் கூட்டணி கதவை மூடியது போன்று, விஜய் திறந்து வைத்திருந்த கதவையும் மூடினேன் என்றும், அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன், தவறான யூகங்களை ஏற்படுத்தக் கூடாது என்பதால் தான், விஜய் பங்கேற்ற புத்தக் வெளியீட்டு விழாவில், தான் கலந்துக் கொள்ளவில்லை என்றும், அவர் தெரிவித்தார்.