இனிமேல் தோரை நம்மால் பார்க்க முடியாது!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹேம்ஸ்வொர்த். இவர் மார்வல் வரிசையில் ‘தோர்’ படங்களில் நடித்து சூப்பர் ஹீரோவாக உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.

ஹாலிவுட் நடிகை எல்சாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை கட்டுக்கோப்பாகவும் வைத்து இருந்தார்.

கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துக்கு தற்போது 39 வயது ஆகிறது. சில தினங்களுக்கு முன்பு தனக்கு அல்சைமர் எனப்படும் மறதி நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மறதி நோய் காரணமாக சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்கப்போவதாக கிறிஸ் ஹேம்ஸ்வொர்த் அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பு, மார்வல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.