“குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய்” – அறிவித்த அரசு! அமலுக்கு வரும் தேதி இதுதான்!

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று, திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்தது. ஆனால், திமுக ஆட்சி அமைத்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகும், அந்த திட்டம் அமலுக்கு வரவில்லை. இதனால், குடும்ப தலைவிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையே, ஈரோடு இடைத்தேர்தலிலும், திமுகவின் வாக்குறுதியாக, இந்த ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி தொடர்பாக, நிதியமைச்சர் தொடர்ந்து அறிவித்து வந்தார்.

அதன் ஒரு பகுதியாக, குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்காக, ரூபாய் 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, அவர் கூறினார்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 -முதல், இந்த திட்டம் அமலுக்கு வரும் என்றும், தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகள் அனைவருக்கும், ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News