அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் அனுராக் சந்திரா. இவருடைய வீட்டு வாசலில் உள்ள காலிங் பெல்லை அடித்து 3 சிறுவர்கள் விளையாடி வந்துள்ளனர். அந்த சிறுவர்களை கேமரா மூலம் கவனித்து வந்த அனுராக் சந்திரா ஆத்திரமடைந்துள்ளார்.

நாளுக்கு நாள் சிறுவர்களின் தொல்லை அதிகமானதால் ஆத்திரமடைந்த அனுராக் சந்திரா தனது காரை எடுத்து கொண்டு சிறுவர்களை அவர் விரட்டி சென்று உள்ளார். மணிக்கு 99 மைல் வேகத்தில் காரை ஓட்டி சென்ற சந்திரா, அவர்கள் 3 பேர் மீதும் மோதியுள்ளார்.
இதில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். அவர்கள் டேனியல் ஹாக்கின்ஸ், திரேக் ரூயிஸ் மற்றும் ஜேக்கப் இவாஸ்கு என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் 16 வயதுடையவர்கள் ஆவர்.
சிறுவர்கள் படுகொலை சம்பவத்தில் சந்திராவை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர் மீது 3 கொலை முயற்சி வழக்குகள் மற்றும் 3 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன.